மாலை பார்ட்டி!! இளசுகள் get together. ஸ்வேதா டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்தாள். தூக்கி வாரி போட்டது. எல்லா கவர்ச்சியும் வெளிச்சம் போட்டது போல வெளிப்படை!
ருக்மணி கடைக் கண்ணால் வெங்காயம் நறுக்கி கொண்டிருந்த மாமியாரை பார்த்தாள். கல்யாணிக்கு பேத்தி என்றால் உயிர். பொறுமையாக எடுத்துச் சொல்லுவாள், என்ன செய்ய போகிறாள்?'என்ன பாட்டி செய்கிறாய்' என்று ஸ்வேதா அருகில் வந்தாள்.
பாட்டியின் முகம் சுருங்கியது. ஆனால் அதிருப்தியை வெளியில் கட்டிக்கொள்ளவில்லை.
ஸ்வேதா மூடியிருந்த டப்பாவின் மூடியை திறந்தாள்.
"ஐய்யய்யோ. வெங்காயத்தை திறந்து வாய்க்காதே. பாட்டி பதறி போய் டப்பாவை மூடினாள். ஸ்வேதா ஆச்சரியப்பட்டாள். "ஏன் பாட்டி, உப்புமாவிற்கு கேரட். பீன்ஸ், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் கட் பண்ணி திறந்து வச்சிருக்கே. வெங்காயம் மட்டும் என்ன ஸ்பெஷல். மூடி வச்சிருக்கே?
"அப்படி கேள். வெங்காயத்திற்கு மட்டும் தீய பாக்டீரியா கிருமிகளை ஈர்க்கும் சக்தி உண்டு". 'அப்படியா?' ஸ்வேதா ஆச்சரியபட்டாள்.' 'ஆமாம் உதாரணத்திற்கு, அம்மை நோய் வந்தால் ஒரு வெங்காயத்தை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். ஒவ்வொரு ஜன்னலிலும் ஒரு வெங்காயத்தை நறுக்கி வைத்து விடுவார்கள்".
"ஓ "
"ஆமாம். அந்த வெங்காயங்களை குப்பையில் கூட போடமாட்டார்கள். நெருப்பில் தான் போடுவார்கள்.!!!"
"சரி பாட்டி. அம்மா வெங்காயத்தை வாங்கி கூடையில் அப்படியே தானே வைத்திருக்கா."
பாட்டியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
நிதானமாக அழுத்தம் திருத்தமாக ச்சொன்னாள்.
" ஸ்வேதா. அங்கு தான் இயற்கை தான் எவ்வளவு அற்புதமான சக்தி என்று காண்பிக்கிறது".
"எப்படி?"
"வெங்காயத்தின் வெளித் தோல் சறுகு போல் ஆகி வெங்காயத்தை போர்த்தி கொண்டு விடும். தீய கிருமிகளால் காய்ந்த அந்த சருகை
ஊடுர்வ முடியாது. அவிழ்த்து போட்டால் தான் தீய கிருமிகளால் அனுக இயலும். இது இயற்கையின் நியதி. "
ஸ்வேதா சற்று நேரம் சிந்தனை வியப்பட்டிரிந்தாள்.
பிறகு நிதானாமாக உள்ளே சென்றாள்.
திரும்பி வரும்போது அவள் மீது ஒரு அழகான துப்பட்டா போர்த்தி இருந்தது.